×

மின்வாரிய அலுவலகங்களில் பயோமெட்ரிக் திட்டம் எப்போது வரும்?: முட்டுக்கட்டைபோடுபவர்கள் குறித்து பகீர் தகவல்

சென்னை: தமிழ்நாடு மின்வாரிய அலுவலகங்களுக்கு தாமதமாக வருவோரை கட்டுப்படுத்த ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவு திட்டம் கொண்டுவர திட்டமிடப்பட்டது. இதற்கு ஒரு குறிப்பிட்ட தரப்பினர் முட்டுக்கட்டை போட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் வீடுகள், தொழிற்சாலை என பல்வேறு விதமான மின் இணைப்புகளை வழங்கி வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் பிரிவு அலுவலகங்கள், துணை மின்நிலையங்கள், மின் நிலையங்கள் ஆகியவை உள்ளன. இவற்றில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தினசரி அலுவலகத்திற்கு வந்ததும், தங்களின் வருகை பதிவை பிரத்தியேகமாக இருக்கும் பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும்.  இந்தமுறையில் தாமதமாக வந்தாலும், சரியான நேரத்திற்கு வந்தது போல் ஒருசிலர் மாற்றி பதிவு செய்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

மேலும் தாமதமாக வரும் அதிகாரிகளால் பணிகளை செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதைதடுக்கும் வகையில் ‘பயோமெட்ரிக்’ முறையை கொண்டுவர வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தை பல மாதங்களுக்கு முன்பே, அனைத்து அலுவலகங்களிலும் செயல்படுத்த ஆயத்தமாகினர். ஆனால் ஒருசிலர் மற்றும் சங்க உறுப்பினர்கள் அதை செயல்படுத்துவதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். பயோமெட்ரிக் கருவி வந்தால் சங்க பணிகள் குறையும் என்றும் அதிகாரிகள் தங்கள் இஷ்டத்துக்கு வருவது தடுக்கப்படும் என்றும் அதனால் சில அதிகாரிகள் மற்றும் மின்வாரியத்தில் இருந்து கொண்டே டெண்டர் உள்பட பல்வேறு பினாமி நிறுவனங்களை நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், அவர்கள் முட்டுக்கட்டை போடுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் சம்மந்தப்பட்ட திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : power offices , Electrical ,power offices, Biometric ,
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...