வெளிநாட்டு முதலீட்டாளர் ரூ.11,012 கோடி முதலீடு

புதுடெல்லி: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் இந்த மாதத்தில் இதுவரை ரூ.11,012 கோடி முதலீடு செய்துள்ளனர்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றனர்.  கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.5,360 கோடி முதலீட்டை விலக்கிக் கொண்டனர். மாறாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.11,182 கோடி முதலீடு செய்திருந்தனர். மார்ச் மாதத்தில் இந்த முதலீடு ரூ.45,981 கோடியாக இருந்தது. நடப்பு மாதத்தில் கடந்த 1ம் தேதி முதல் 16ம் தேதி வரை ரூ.14,300.22 கோடி முதலீடு செய்திருந்தனர்.

இதில் கடன் சந்தையில் ரூ.3,288.12 கோடி விலக்கிக் கொண்டனர். இதன்படி இந்த மாதத்தில் மேற்கொண்ட நிகர முதலீடு ரூ.11,012.10 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இறுதி வரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீட்டில் பெருமளவு, வெளியேற்றி வந்துள்ளனர். இதனால் நிகர முதலீடு குறைவாகவே இருந்தது. சர்வதேச சூழல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு முதலீடுகள் மிக எச்சரிக்கையுடன் கையாளப்பட்டு வந்தன. இந்த சூழ்நிலையில் மீண்டும் முதலீடு செய்யப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: