துபாயில் இருந்து சென்னைக்கு ரூ.36 லட்சம் தங்கம், சிகரெட் கடத்தி வந்த 5 பேர் கைது

சென்னை: துபாயில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கம், சிகரெட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். துபாயில் இருந்து எமரேட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 2.45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முகமது கவுஸ் (37), திருச்சியை சேர்ந்த அப்ஸர் அலி (26) ஆகிய 2 பேர், சுற்றுலா பயணிகள் விசாவில் துபாய் சென்று திரும்பினர். சுங்க அதிகாரிகள் அவர்களது உடமைகளை முழுமையாக சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. ஆனாலும், அவர்கள் மீது சந்தேகம் தீராததால்,  அவர்கள் இருவரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். அப்போது, கர்நாடக மாநில பயணியின் உள்ளாடையில் 500 கிராம் தங்க கட்டிகள் இருப்பதை கண்டு பிடித்தனர். அதேபோல் திருச்சியைச் சேர்ந்த பயணியிடம் 600 கிராம் தங்க கட்டி வெள்ளி முலாம் பூசப்பட்டு அவரது உள்ளாடையில் மறைத்து வைத்திருந்தார்.

இருவரிடமும் 1.1 கிலோ தங்கம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.34.5 லட்சம். போலீசார் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர். சிகரெட் பறிமுதல்: அதே விமானத்தில் சென்னையை சேர்ந்த அஸ்மது (21), சுவேனா (24), முகமது (28) ஆகிய மூன்று பேர் சுற்றுலா பயணிகள் விசாவில் துபாய் சென்று சென்னை திரும்பினர். சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அவர்களது சூட்கேஸை திறந்து பாரத்தனர். அதில் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. 3 பேரிடம் இருந்து 72 சிகரெட் பாக்கெட்டுகளை சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்ப்பு ரூ.1.5 லட்சம். சிகரெட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் மூன்று பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: