ஜன்தன் கணக்குகளில் ரூ.1 லட்சம் கோடி

புதுடெல்லி: ஜன்தன் கணக்குகளில் உள்ள டெபாசிட் தொகை விரைவில் ஒரு கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைவருக்கும் வங்கிக்கணக்கு என்ற இலக்குடன், 2014 ஆகஸ்ட் 28ம் தேதி ஜன்தன் கணக்கு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 35.39 கோடி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் 27ம் தேதிப்படி இந்த கணக்குகளில் மொத்தம் ரூ.95,382.14 கோடி உள்ளது. இந்த மாதம் 3ம் தேதி புள்ளி விவரப்படி இதில் ரூ.97,665.66 கோடி இருப்பு உள்ளது. ஜன்தன் கணக்கில் கணக்கு துவக்கியவர்களில் ரூ. 27.89 கோடி பேருக்கு ரூபே டெபிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்த திட்டத்தில் கணக்கு துவக்கிய கிராம மக்கள் பலர் இந்த வங்கி கணக்குகளை தொடர்ந்து பராமரிப்பதில்லை என கூறப்படுகிறது. சில கணக்குகள் பூஜ்யம் இருப்பு தொகையுடன் உள்ளன. சில கணக்குகளில் மானியம் போன்றவை வரவு வைக்கப்படுகின்றன. பல வாடிக்கையாளர்கள் இந்த தொகையை எடுக்க வருவதில்லை. இதனால் பெரும்பாலான டெபாசிட் பயனின்றி முடங்கியுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது என வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: