நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 50 சவரன் கொள்ளை

சென்னை: நகைக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மீஞ்சூர் ஹேமச்சந்திரா நகரில் வசித்து வருபவர் கமல் (36), மீஞ்சூர்  பஜாரில் நகைக்கடை வைத்துள்ளார். இவர் கடந்த 17ம் தேதி குடும்பத்துடன் திருப்பதி சென்றுவிட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று  பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 50 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு தெரியவந்தது.இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார்.

Advertising
Advertising

அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் பீரோவில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் ராஜா, வீட்டிலிருந்து பஜார் வரை ஓடி நின்றது.

கொள்ளையர்கள் காரில் வந்து கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: