மக்களவை பொதுத்தேர்தல் சென்னையில் 18 சட்டமன்ற தொகுதிகளில் மயிலாப்பூரில்தான் வாக்குப்பதிவு குறைவு: 1.17 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை

சென்னை: மக்களவை தேர்தலில் சென்னையில் உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளில் மயிலாப்பூரில் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளது. 1 லட்சத்து 17 ஆயிரத்து 7 பேர் வாக்களிக்கவில்லை.தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. மக்களவை தேர்தலில் சராசரியாக 71.90 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகப்பட்சமாக தர்மபுரியில் 80.49 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தப்பட்சமாக தென்சென்னையில் 56.34 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.தலைநகரான சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில் 18 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தொகுதிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் தான் மிகக்குறைவாக 54.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவொற்றியூர் சட்டப்பேரவை தொகுதியில் 2 லட்சத்து 87 ஆயிரத்து 877 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 706 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். அதே போல ஆர்.கே.நகரில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 597 வாக்காளர்களில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 783 பேரும், பெரம்பூரில் 2 லட்சத்து 93 ஆயிரத்து 609 வாக்களர்களில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 313 பேரும், கொளத்தூர் தொகுதியில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 300 வாக்காளர்களில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 309 பேரும், திரு.வி.க.நகர் தொகுதியில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 354 வாக்காளர்களில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 437 பேரும், ராயபுரம் தொகுதியில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 724 வாக்காளர்களில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 657 பேரும் வாக்களித்துள்ளனர்.

Advertising
Advertising

தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட விருகம்பாக்கம் சட்டப்பேரவை தொகுதியில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 789 வாக்காளர்களில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 215 பேரும், சைதாப்பேட்டையில் 2 லட்சத்து 69 ஆயிரத்து 921 வாக்காளர்களில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 137 பேரும், தி.நகர் 2 லட்சத்து 31 ஆயிரத்து 397 வாக்காளர்களில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 304 பேரும், மைலாப்பூர் தொகுதியில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 727 வாக்காளர்களில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 720 பேரும் வாக்களித்துள்ளனர். 1 லட்சத்து 17 ஆயிரத்து 7 பேர் வாக்களிக்கவில்லை.வேளச்சேரியில் 3 லட்சத்து 513 வாக்காளர்களில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 786 பேரும், சோழிங்கநல்லூரில் 6 லட்சத்து 38 ஆயிரத்து 968 வாக்காளர்களில் 3 லட்சத்து 52 ஆயிரத்து 519 பேரும் வாக்களித்துள்ளனர்.மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட வில்லிவாக்கம் சட்டப்பேரவை தொகுதியில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 149 வாக்காளர்களில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 3 பேரும், எழும்பூர் தொகுதியில் 1 லட்சத்து 81 ஆயிரத்து 99 வாக்காளர்களில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 45 பேரும், துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 574 வாக்காளர்களில் 96 ஆயிரத்து 63 பேரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 279 வாக்காளர்களில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 93 பேரும், ஆயிரம் விளக்கில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 938 வாக்காளர்களில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 753 பேரும், அண்ணாநகர் தொகுதியில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 96 வாக்காளர்களில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 93 பேரும் வாக்களித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: