பொம்மை தொழிற்சாலையில் தீ

சென்னை: நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், லேக் பகுதி அருகே பொம்மை, கண்ணாடி சிலைகள் செய்யும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு தீவிபத்து ஏற்பட்டது. தீ  மளமளவென பரவியதில் உள்ளே கெமிக்கல், பழைய அட்டை, சிலைகள் என பல பொருட்கள் கொழுந்து விட்டு எரிந்தது. தீ அருகே இருந்த மரங்களிலும் பற்றியது.தகவலறிந்து தீயணைப்பு மீட்புக் குழுவினர் 4 தீயணைப்பு  வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினர்.

Advertising
Advertising

ஆனாலும் முடியவில்லை. இதனால் கூடுதலாக மேலும் 2 வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. முன் எச்சரிக்கையாக சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. மேலும், அப்பகுதியில் இருந்த மக்கள்  வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து வீரர்கள் அதிகாலை வரை போராடி தீயை அணைத்தனர். தீவிபத்தில் கண்ணாடி, இழை, ரசாயனங்கள் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. மின் மாற்றியில்  ஏற்பட்ட மின்கசிவால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: