சின்னத்தை ஒழித்தால்தான் நல்லவர்கள் வெல்வார்கள்: அன்னா ஹசாரே புது தகவல்

ஊழலை ஒழிப்பதற்கான லோக்பால் சட்டத்தை கொண்டு வருவதற்காக, பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரதப் போராட்டம், பல மாற்றங்களை ஏற்படுத்தியது. அவருடைய சீடராக இந்த போராட்டத்தில்  வலம் வந்த அரவிந்த் கெஜ்ரிவால்தான், இன்று டெல்லியில் முதல்வராக இருக்கிறார். தேர்தல் சட்டங்களில் சீர்த்திருத்தம் செய்ய வேண்டும் என்பது ஹசாரேவின் நீண்ட கால கோரிக்கை.மகாராஷ்டிரா மாநிலம், அகமத்நகர்  மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான ராலேகன் சித்தியில் நேற்று அவர் அளித்த பேட்டியில், சின்னங்களை பற்றிய புதிய தகவலை வெளியிட்டார். அவர் கூறுகையில், ‘‘ நமது அரசியலமைப்பு சட்டத்தில் தேர்தல்  சின்னங்கள் குறித்தோ, அரசியல் கட்சிகள் குறித்தோ எதுவும் கூறப்படவில்லை. 25 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் என்றுதான் அது  கூறுகிறது.

Advertising
Advertising

தேர்தலில் தனிப்பட்ட நபர்களைத்தான் அரசியலமைப்பு சட்டம் அங்கீகரிக்கிறது. 1952ல்்  நாட்டில் முதல்முறையாக தேர்தல் நடந்தபோது, நவீன பிரிண்டிங் தொழில்நுட்பம் கிடையாது. அதனால், கட்சிகளுக்கு சின்னங்கள்  ஒதுக்கப்பட்டன. இப்போதைய தொழில்நுட்ப யுகத்தில் சின்னங்கள் தேவையில்லை. வேட்பாளரின் பெயரும், புகைப்படமும் மட்டும் போதுமானது. தேர்தல் சின்னங்கள் ஒழிக்கப்பட்டால்தான், நல்ல மனிதர்கள் தேர்வு  செய்யப்படுவார்கள்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: