பதவி மோகம் என்னிடம் இல்லை அரசியலுக்கு முழுக்கா? நான் எப்ப சொன்னேன்!: தேவகவுடா அந்தர் பல்டி

மதசார்பற்ற  ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, கர்நாடகா மாநிலம் துமகூருவில் நேற்று அளித்த பேட்டி: எனது கடைசி மூச்சு இருக்கும் வரை நாடு மற்றும் மாநில  மக்களுக்கு சேவை  செய்வேன். எக்காரணத்தை முன்னிட்டும் முழுநேர  அரசியலில் இருந்து நான் ஓய்வு பெறமாட்டேன். இனிமேல் தேர்தலில்  போட்டியிட மாட்டேன் என்று கூறியது உண்மைதான். ஆனால், கட்சியின்  மூத்த தலைவர்கள் கொடுத்த  அழுத்தத்தால் இம்முறை மக்களவைத்  தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். எனவே, மக்களுக்கு சேவை  செய்வதற்காக தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன். அகில இந்திய  காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தியுடன்  தோளோடு  தோள்கொடுத்து பணியாற்றுவேன்.

Advertising
Advertising

இம்முறை ராகுல் காந்தி பிரதமராவது  உறுதி. இதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை. பிரதமராகும் ஆசை  எனக்கில்லை. பதவி மோகம் என்னிடம் இல்லை. அதற்காக அரசியலில் இருந்து  ஓய்வுபெறும் எண்ணமுமில்லை.  மக்களவையில் ராகுல் காந்தியுடன்  நான் அமருவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார். ‘தேர்தலில் இனி  போட்டியிடப் போவதில்லை’ என்று ஏற்கனவே கூறியிருந்த தேவகவுடா,  தற்போது தனது நிலையை மாற்றிக்  கொண்டு, இந்தத் தேர்தலில் தும்கூரில்  களம் காண்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: