கூடவே கூடாது: மோடி நாடகத்துக்கும் தடை

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, ‘மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்’ என்ற பெயரில் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியிடப்பட இருந்தது. இதில், மோடியாக பிரபல நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.  தேர்தல் நேரத்தில் இதை இப்படத்தை வெளியிடுவது, மக்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகளின் தெரிவித்த எதிர்ப்பால், இப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை செய்தது. இந்நிலையில், ‘மோடி  - ஒரு சாதாரண மனிதனின் பயணம்’ என்ற பெயரிலான நாடகம், இணையதளத்தில் தொடர் கதையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதுவும், மோடியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு  தெரிவித்ததை தொடர்ந்து, இதை இணையதளத்தில் தொடர்ந்து ஒளிபரப்ப, தேர்தல் ஆணையம் நேற்று தடை விதித்தது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: