முத்தரையர் பற்றி அவதூறு சமூக விரோதிகளை உடனே கைது செய்ய வேண்டும்: எச்.ராஜா வலியுறுத்தல்

சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று வெளியிட்ட அறிக்கை:முத்தரையர் சமுதாயத்தைப் பற்றியும் குறிப்பாக முத்தரையர் சமுதாய பெண்களை மிக கேவலமாக இழிவுபடுத்தியும் சில தீய சக்திகள் பேசிய ஆடியோ சமூகவலைத்தளங்களில் வெகு வேகமாக பரவி வருகின்றது.  அந்த சமூக விரோதிகள் மீது காவல்துறை மிகக் கடுமையான நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும். ஆனால் 48 மணி நேரம் கடந்த பின்பும்  அவர்களை காவல் துறைகைது செய்யாதது கண்டிக்கத்தக்கது. இந்தக் கீழ்த்தரமான ஆடியோவால் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்ட அந்த சமுதாய மக்களின் இதயங்களுக்கு நாம் அனைவரும் ஆதரவளிப்பது தற்போது மிக முக்கியமான ஒன்று. இந்த சமுதாய மக்களின் அமைதியான சட்டபூர்வமான போராட்டங்களுக்கு நம்முடைய ஆதரவு எப்பொழுதும் உண்டு. தமிழக அரசும், தமிழக காவல்துறையும் இந்த சமூக விரோதிகள் மீது விரைவான உறுதியான நடக்கையை எடுத்து, சமூக விரோதிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்றும் நம்புகிறேன்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: