நிரூபிக்க முடியுமா? பினராய் சவால்

பிரதமர் மோடி 2 நாட்களுக்கு முன்  திருவனந்தபுரத்தில் பாஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது, கேரளாவில் தெய்வத்தின் பெயரை  சொல்பவர்களை போலீசார்  ெபாய் வழக்கு போட்டு கைது  செய்வதாகவும், அவர்கள் மீது  தடியடி  நடத்துவதாகவும் குற்றம்சாட்டினார். இதற்கு கேரள  முதல்வர்  பினராய் விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து  அவர்  கூறுகையில், ‘‘தெய்வத்தின் பெயரை  உச்சரித்ததாக இதுவரை ஒருவர்  மீது  கூட வழக்குப்பதிவு செய்யவில்லை. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தான்   வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பிரதமர் மோடி தெய்வத்தின் பெயரை  உச்சரித்தாலே கைது  செய்வதாகவும், தடியடி நடத்துவதாகவும் பொய்யான தகவலை   கூறியுள்ளார். அப்படி யார் மீதாவது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது   என்பதை அவரால் நிரூபிக்க முடியுமா? மதத்தின் பெயரால் கலவரத்தில்    ஈடுபடுபவர்களுக்கு பாஜ ஆளும் மாநிலங்களில் தான் பாதுகாப்பு அளிக்கப்பட்டு   வருகிறது. ஆனால், கேரளாவில் அது நடக்காது. தன்னிடம் இருந்து ஆட்சி பறிபோகும்   அச்சத்தில், தான் வகிக்கும் பதவியை மறந்து  மோடி  இவ்வாறு பேசுகிறார்,’’ என்றார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED வேலை செய்பவர்களுக்கு சம்பளம்...