அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் விக்விஜய் சிங்கை எதிர்த்து பாஜ சார்பில் போட்டியிடும் பெண் துறவியான பிரக்யா சிங் தாகூர், போபாலில் தனது  தொண்டர்களின் உதவியுடன் பிரசாரத்துக்கு நேற்று புறப்பட்டார். மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட இவர், மகாராஷ்டிரா அரசு தொடர்ந்த தீவிரவாத தடுப்பு வழக்கில் நிபந்தனை ஜாமீன்  பெற்றுள்ளார். தனது மனுவில், தனக்கு நடக்க முடியாத அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக காரணம் தெரிவித்துள்ளார். போபாலில் போட்டியிடும் அவரின் உடல்நிலை நன்றாக இருப்பதால், அவருக்கு வழங்கிய  ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில்தான், தொண்டர்கள் நேற்று அவரை கைத்தாங்கலாக பிரசாரத்துக்கு  அழைத்துச் செல்லும் இந்த காட்சி அரங்கேறியது.

தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

மாலேகாவ் வழக்கில் தன்னை கைது செய்து சித்ரவதை செய்த போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரி, தான் விட்ட சாபத்தால்தான் மும்பை தாக்குதலில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாக இரு தினங்களுக்கு முன் கூறி பிரக்யா   சிக்கலில் மாட்டினார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நேற்று அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: