அடுத்து என்ன செய்வாரோ தெரியாது மோடியை நினைச்சா ஒரே பயமா இருக்கு!: சரத் பவார் பீதி

கடந்த 2016ம் ஆண்டு புனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் மோடி பேசுகையில், ‘எனது அரசியல் குரு சரத் பவார்தான். அவரை விரலை பிடித்துதான் அரசியல் பாதையில் நடந்து வந்தேன்,’ என்று குறிப்பிட்டார்.  தற்போது, மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலில் பாஜ-சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஒவ்வொரு பிரசாரத்திலும் மோடி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை கடுமையாக விமர்சித்து வருகிறது.  இது குறித்து, தனது மகள் சுப்ரியா சுலே போட்டியிடும் பாராமதி மக்களவை தொகுதியில் நேற்று நடந்த பிரசாரத்தில் பவார் பேசியதாவது: எனது விரலை பிடித்துதான் அரசியல் நடை பயின்றதாக மோடி முன்பு பேசினார்.   ஆனால், தற்போது அவரைப் பார்த்தால் எனக்கே பயமாக இருக்கிறது. அவர் எந்த நேரத்தில் என்ன செய்வார் என்பது யாருக்குமே தெரியாது. இந்த தொகுதியில் பிரசாரம் செய்ய அமித் ஷா வருகிறார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வருகிறார். ஏன் இந்த தொகுதிக்கு பாஜ.வினர் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் மட்டும் மோடி 7 பேரணியில் பங்கேற்றுள்ளார். அதில்,  அவர் பேசியதெல்லாம் முழுக்க முழுக்க என்னைப் பற்றிதான். கடந்த 5 ஆண்டில் அவர்கள் சொல்லிக் கொள்ளும்படி எதுவுமே மக்களுக்கு செய்யவில்லை. அதனால், மற்றவர்களை குறை கூறி மட்டுமே ஓட்டு  கேட்கிறார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: