லீவை ஜாலியா கழிக்க குவிகின்றனர் கொடைக்கானலில் குளுகுளு சீசன் துவங்கியது: சுற்றுலாப்பயணிகள் படையெடுப்பு

கொடைக்கானல்:  கொடைக்கானலில் குளுகுளு சீசன் துவங்கியதையடுத்து சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். ‘மலைகளின் இளவரசி’ எனப்படும் கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் துவங்கியுள்ளது. பள்ளி மற்றும் வார  விடுமுறை, கொடைக்கானலில் நிலவும் இதமான சூழல், குளுகுளு சீசனை அனுபவிக்கும்விதமாக நேற்று சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்தனர். கடந்த வாரத்தை விட இந்த வாரம் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை  அதிகரித்திருந்தது. நேற்று மேகமூட்டம் அவ்வப்போது கண்ணாமூச்சி காட்டுவது போன்று ஜாலம் காட்டியது. இதன் காரணமாக தூண் பாறையை மேகம் முத்தமிடும் அழகிய காட்சியை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.  அதுபோல ‘க்ரீன் வேலி வியூ’ எனப்படும் தற்கொலை முனை பகுதியில் மேகமூட்டம் இல்லாமல் இருந்தது.

Advertising
Advertising

இதுபோலவே குணா குகை மற்றும் பைன் பாரஸ்ட் ஆகிய இடங்களில் மேக மூட்டமின்றி தெளிவாக இருந்தது. பயணிகளின் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பகல் நேரத்தில் வெயில் அதிகமாக இருந்தாலும்,  மாலை, இரவு நேரங்களில் மிதமான சூழல் நிலவி வருகிறது. இந்த மாறுபட்ட சூழலை சுற்றுலாப்பயணிகள் வெகுவாக ரசித்தனர். தொடர்ந்து கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரிச்சாலையில் சைக்கிள்  சவாரி செய்தபடி, கொடைக்கானல் அழகை கண்டு ரசித்தனர்.  கடந்த 2 தினங்களாக கொடைக்கானலில் பரவலாக நல்ல மழை பெய்ததால் அங்கு நிலவிய வெப்பச்சூழல் மறைந்து குளுகுளு சீசனாக மாறியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: