தர்மபுரி அதியமான் சிலை அருகே மர்ம சூட்கேசால் வெடிகுண்டு பீதி

தர்மபுரி: தர்மபுரியில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பென்னாகரம், சேலம் என 4 ரோடு சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பு ரவுண்டானாவில் அவ்வைக்கு அதியமான் நெல்லிக்கனி கொடுப்பது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த  சிலை அருகே, நேற்று காலை ஒரு சூட்கேஸ் கிடந்தது. அதற்குள் வெடிகுண்டு இருக்கலாம் என பீதி எழுந்தது. இதையடுத்து, வெடிகுண்டு தடுப்பு நிபுணர் குழுவுடன் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். இதில்,  வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது நிரூபணமானது. அதில் லேகியம் டப்பா, பெண்ணுடன் மாற்றுத்திறனாளி போட்டோ, விபூதி 6 கட்டிகள், வாக்காளர் அடையாள அட்டை இருந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து  வருகின்றனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: