நடிகையான மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மற்றொரு நடிகையை காதலித்து மணந்தார் மலையாள நடிகர்: சத்தியம் மேல் சத்தியம் செய்தார்

சென்னை: நடிகையை காதலித்து திருமணம் செய்த நடிகர், அவரை விவாகரத்து செய்துவிட்டு, ேவறு ஒரு நடிகையை மீண்டும் காதலித்து திருமணம் செய்துள்ளார். இச்சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.   தமிழில் வெளியான அறிவுமணி, ஜெர்ரி, கத்தி கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மீரா வாசுதேவன். மறைந்த ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன் விஷால் அகர்வால் என்பவரை  காதலித்து திருமணம் செய்துகொண்டார். விஷால் அகர்வாலை 3 வருடங்களுக்கு பிறகு விவாகரத்து செய்தார். பிறகு மலையாள நடிகர் ஜான் கொக்கென்னை காதலித்து திருமணம் செய்தார். ஆனால், 4 வருடங்கள் வாழ்ந்தவர்  திடீரென கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரையும் பிரிந்தார்.இந்நிலையில் ஜான் கொக்கென்னுக்கும், நடிகை பூஜா ராமச்சந்திரனுக்கும் நட்பு ஏற்பட்டு காதல் மலர்ந்தது.

Advertising
Advertising

‘’நண்பன்’’, ‘’பீட்சா’’, ‘’நண்பேன்டா’’, ‘’பிளாக் காபி’’ உள்பட சில படங்களில் நடித்துள்ள பூஜா ராமச்சந்திரனை திருமணம் செய்த ஜான் கொக்கென், புது மனைவிக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளார்.

‘’என் காதலி பூஜா. மிகச் சிறந்தவற்றையே உனக்கு தருவேன், இது சத்தியம். உன்மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன், இது சத்தியம். உன் தேவைகளுக்கு முக்கியத்துவம் தருவேன், இது சத்தியம். என் நேரத்தை உனக்கு  செலவழிப்பேன், இது சத்தியம். உனது சந்தோஷத்தில்தான் என் கவனம் இருக்கும், இதுவும் சத்தியம்’’ என்று ஜான் கொக்கென் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: