வடகிழக்கு பருவமழை காலகட்டங்களில் தூர்வார நீர்வழித்தடங்கள் பணிக்கான நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு: ஒப்பந்த நிறுவனத்துடன் கைகோர்த்து பொறியாளர்கள் மோசடி

சென்னை: வடகிழக்கு பருவமழை காலகட்டங்களில் நீர்வழித்தடங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டிலேயே முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இதில், ஒப்பந்த நிறுவனத்துடன் பொறியாளர்கள் மோசடியில் ஈடுபட்டு வருவதும் அம்பலமாகியுள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையை ஓட்டி சென்னையில் உள்ள நீர்வழித்தடங்களான அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலையாறு, ஆரணியாறு தூர்வாரப்படுகிறது. இந்த பணிகள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு 60 நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு சார்பில் ₹8 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதை தொடர்ந்து, பொதுப்பணித்துறை சார்பில் ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு தூர்வாரும் பணியை தொடங்கி விடுகிறது. இந்த நிறுவனம் சார்பில் அக்டோபர் முதல் டிசம்பர் 31ம் தேதி வரை ஒப்பந்தம் விடப்படுகிறது. இந்த தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை சார்பில் கூடுதல் நிதி கேட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அடையாற்றில் ₹3.20 கோடியும், கூவம் ₹50 லட்சம், பக்கிங்காம் கால்வாய் ₹50 லட்சம் என ஒவ்வொரு நீர்வழித்தடங்களை தூர்வார நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு வருகிறது. 1000 மீட்டர் நீளமுள்ள கால்வாயை தூர்வார ₹5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஆனால், 1000 மீட்டர் நீளமுள்ள கால்வாயை தூர்வார ₹25 லட்சம் வரை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது போன்று ஒவ்வொரு கால்வாய்களிலும் கூடுதலாக  தூர்வார நிதி ஒதுக்கீடு பெறப்படுகிறது. இந்த நிதி ஒதுக்கீடு தொடர்பாக தமிழக நிதித்துறையும் கேள்வி கேட்பதில்லை. பெரும்பாலும், இந்த தூர்வாரும் பணியை நியமன அடிப்படையிலேயே ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்படுகிறது. இதை, பொறியாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, லட்சக்கணக்கில் பொறியாளர்கள் பணம் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் சென்றுள்ளது. இந்த புகாரின் மீது பொதுப்பணித்துறை தலைமை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதை பயன்படுத்தி கொண்டு கடந்தாண்டும் லட்சக்கணக்கில் அதிகாரிகள் பில் தொகையில் கையாடல் செய்து இருப்பதா கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து கான்ட்ராக்டர் ஒருவர் கூறும் போது, ‘ஒவ்ெவாரு ஆண்டும் நீர்வழித்தடங்களை தூர்வாருவதில் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து தான் கடந்தாண்டு கூட பாலாறு வட்ட கண்காணிப்பு பொறியாளர்கள் அலுவலகம் ஒரு சில இடங்களில் கால்வாயை தூர்வார நிதி ஒதுக்கீட்டை குறைத்தது. ஆனாலும் பல இடங்களில் கால்வாய் தூர்வாரும் பணியை குறைக்கவில்ைல. நியமன அடிப்படையில் ஒரே நிறுவனத்திற்கு தருவதால் அந்த இடங்களில் குறைக்க நடவடிக்ைக எடுக்கவில்லை’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: