சேலம் மேட்டூரில் நாத்திகர் விழா நடத்த அனுமதி கோரி ஐகோர்ட்டில் மனு: டிவிஷன் பெஞ்சில் நாளை விசாரணை

சென்னை: நாத்திகர் விழாவுக்கு அனுமதி அளிக்கக்கோரி  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. ெசன்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:சேலம் மாவட்டம் மேட்டூரில் ஏப்ரல் 27ம் தேதி நாத்திகர் விழாவை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.இந்த விழாவிற்கு அனுமதி வழங்கக்கோரி கடந்த மாதம் 28ம்தேதி கருமலைக்கூடல் போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தோம். ஆனால், தேர்தல் நேரம் என்பதால் தங்களால் முடிவு எடுக்க முடியாது தேர்தல் ஆதிகாரியிடம்தான் அனுமதி பெற வேண்டும் என்று எங்கள் கோரிக்கையை போலீசார் நிராகரித்து விட்டனர்.

 இதையடுத்து, ஏப்ரல் 10ம் தேதி மாவட்ட தேர்தல் அதிகாரியான சேலம் மாவட்ட கலெக்டரிடம் விழா நடத்த அனுமதி கோரி மனு கொடுத்தோம். ஆனால், எங்கள் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, வரும் 27ம் தேதி நாத்திகர் விழா நடத்த அனுமதி வழங்குமாறு கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நாளை, நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வரவுள்ளது.
Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: