கடந்த ஒரு மாதமாக மலேசிய மணல் முன்பதிவு நிறுத்தம்: எண்ணூர் துறைமுகத்தில் 60 ஆயிரம் டன் தேக்கம்

சென்னை: எண்ணூர் துறைமுகத்துக்கு வந்த 60 ஆயிரம் டன் மலேசிய மணல் ஒரு மாதமாக விற்பனை தொடங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து  இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த மணல் ஒரு யூனிட் ரூ.10 ஆயிரத்து 350க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே எண்ணூர் துறைமுகத்தில் இறக்குமதி செய்து மணல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், 6வது  முறையாக 55 ஆயிரம் டன் மணல் காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த துறைமுகத்தில் இருந்து மணல் முழுவதுமாக விற்பனை செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே  கடந்த மாதம் 60 ஆயிரம் டன் மணல் எண்ணூர் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த மணல் முன்பதிவுக்காக உடனடியாக திறக்கப்படுவது வழக்கம். ஆனால், காட்டுபள்ளி துறைமுகத்தில் மணல் விற்பனை ஆகவில்லை.  இதனால், எண்ணூர் துறைமுகத்தில் மணல் முன்பதிவு தொடங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘எண்ணூர் துறைமுகத்தில் மணல் விற்பனை இந்த வார இறுதிக்குள் தொடங்கப்படும். தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலை ஒரு சிலரே  வாங்கியுள்ளனர். எனவே, அந்த மணலை என்ன செய்யலாம் என்பதை அரசு தான் முடிவெடுக்கும்’ என்றர். ஆந்திரா மற்றும் கொசஸ்தலையாற்றுபடுகையில் இருந்து திருட்டுத்தனமாக அள்ளப்படும் மணல் குறைந்த விலைக்கு  விற்பனை செய்யப்படுகிறது. இந்த மணல் தாராளமாக கிடைப்பதால் தான் காட்டுபள்ளி துறைமுகத்தில் மணல் விற்பனை குறைந்துள்ளது. அதே நேரத்தில், அரசு சார்பில் ஆற்றுமணல் ஒரு யூனிட் ரூ.550க்கு விற்பனை  செய்யப்பட்டு வந்தது. தற்போது மலேசிய மணல் ஒரு யூனிட் ரூ.10,350க்கு விற்கப்படுகிறது. விலையை குறைத்தால் மட்டுமே மணல் விற்பனை ஆகும். எனவே, இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: