சில்லி பாயின்ட்...

* ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஆஷ்டன் டர்னர் நேற்று டக் அவுட்டானார். அவர் கடைசியாக விளையாடிய 4 டி20 போட்டியிலும் டக் அவுட்டாகி உள்ளது (0,0,0,0) குறிப்பிடத்தக்கது.

* பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர் மற்றும் பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் என இரட்டை ஆதாயம் பெறுவதாக எழுந்த புகார் குறித்து விளக்கம் அளிக்குமாறு சவுரவ் கங்குலிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertising
Advertising

* ஆசிய பாக்சிங் சாம்பியன்ஷிப் தொடரின் கால் இறுதியில் விளையாட இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன், தீபக் தகுதி பெற்றனர். நட்சத்திர வீரர் ஷிவா தாபா கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

* ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் அரை இறுதியில் விளையாட இந்தியா, இங்கிலாந்து அணிகள் நிச்சயம் தகுதி பெறும் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் நட்சத்திரம் பிரையன் லாரா கணித்துள்ளார்.

* மான்டி-கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில், நட்சத்திர வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) 4-6, 2-6 என்ற நேர் செட்களில் பேபியோ பாக்னினியிடம் (இத்தாலி) அதிர்ச்சி தோல்வி  அடைந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: