அசத்தும் புதிய மஹிந்திரா தார்

இந்திய ஆப்ரோடு பிரியர்களின் முதன்மையான தேர்வாக மஹிந்திரா தார் எஸ்யூவி ரக ஜீப் விளங்குகிறது. இந்த நிலையில், கால மாற்றத்திற்கு ஏற்ப முற்றிலும் புதிய தார் எஸ்யூவியை ரக ஜீப்பை மஹிந்திரா உருவாக்கி இருக்கிறது. தற்போது இப்புதிய தலைமுறை தார் எஸ்யூவி ரக ஜீப்பை, நாட்டின் பல்வேறு சீதோஷ்ண நிலைகளில், மஹிந்திரா சோதனைகளுக்கு உட்படுத்தி வருகிறது. தோற்றத்தில் தற்போதைய தார் எஸ்யூவி ரக சாயல் வெளிப்பட்டாலும், உருவத்தில் பெரிதாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. நீளம், அகலம், உயரத்தில் தற்போதைய மாடலைவிட பெரிதாக தெரிகிறது. மேலும், புதிய கிரில் அமைப்பு, பம்பர் அமைப்புடன் வந்துள்ளது. ஓட்டுனர் மற்றும் பயணிகள் அமர்வதற்கு சிறப்பான வகையில் காரின் உட்புறத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டு, ஸ்டீயரிங் வீல் அமைப்பு, இருக்கை அமைப்பு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இன்போடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. தவிர, சில அடிப்படை வசதிகளும் இடம்பெற்றுள்ளது. டியூவல் ஏர்பேக், ஹை ஸ்பீடு அலர்ட், சீட் பெல்ட் ரீமைன்டர், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பார்க்கிங் சென்சார் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன.

Advertising
Advertising

தற்போதைய தார் மாடலில், 2.6 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 2.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 2.6 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 63 பிஎச்பி பவரையும், 193 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த வல்லதாக உள்ளது. 2.5 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரையும், 247 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் பெற்றுள்ளது. புதிய தலைமுறை தார் மாடலில், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இப்புதிய இன்ஜின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்ட தரத்துடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், மஹிந்திரா எஸ்யூவி ரக வாகனங்களில் பயன்படுத்தப்படும் 2.2 லிட்டர் எம்-ஹாக் டீசல் இன்ஜினுக்கு மாற்றாகவும் இந்த இன்ஜின் பயன்படுத்தப்பட இருக்கிறது. புதிய மஹிந்திரா தார், அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. போர்ஸ் குர்கா எஸ்யூவி ரக ஜீப்புக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். அத்துடன், ஆப் ரோடு பிரியர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: