விவிஐபி ஹெலிகாப்டர் வழக்கு தரகர் ஜாமீன் மனு தள்ளுபடி

புதுடெல்லி:  காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 3,600 கோடிக்கு  ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 360 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அரபு நாட்டில் தங்கியிருந்த இடைத்தரகர்  ராஜிவ் சக்சேனாவை அமலாக்கத்துறை கைது செய்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் சுஷேன் மோகன் குப்தா என்பவரும் லஞ்சப்பணத்தை பெற இடைத்தரகராக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, பண மோசடி  தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குப்தா நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ஜாமீன் கேட்டு குப்தா தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த்  குமார் நேற்று விசாரித்தார்.பின்னர்,  குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு...