களம் இறங்கும் புதிய கேடிஎம் பைக்

ஆஸ்திரியாவை சேர்ந்த மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான கேடிஎம், உலக நாடுகள் முழுவதும் இளைஞர்களை கவரும் விதமாக ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் அனைத்து 400சிசி கொண்ட மோட்டார் சைக்கிள்களும் பஜாஜ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த நிறுவனம் சில குறிப்பிட்ட மாடல்களை மட்டுமே இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது.இந்நிலையில்தான், கேடிஎம் நிறுவனம் தனது புத்தம் புதிய மாடலான ஆர்சி 125 பைக்கை இந்தியாவில் சோதனை ஓட்டம் செய்து வருகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. கேடிஎம் நிறுவனம் அதன் டியூக் வரிசையில் விலை குறைவான மாடலான 125சிசி கொண்ட டியூக்125 மோட்டார்சைக்கிளை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த மோட்டார் சைக்கிளின் சக்தியானது சற்று குறைவாக இருந்தாலும், கேடிஎம் பைக்கிற்கே உரித்தான ஸ்டைலை பெற்றிருந்ததால், டியுக்125 அமோகமான விற்பனையை பெற்று வருகிறது.

இந்நிலையில், ஆர்சி 125 என்ற மேலும் ஒரு புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் விதமாக கேடிஎம் நிறுவனம் பரிசோதனை செய்து வருகிறது. இந்த மோட்டார் சைக்கிளின் சைலன்சர் அமைப்பு இதற்கு முன்னதாக வெளியான மாடல்களை காட்டிலும் சற்று மாறுதல் கொண்டு காணப்படுகிறது. இந்த மோட்டார் சைக்கிள் ஆர்சி 200 மற்றும் 390 மாடல்களின் சிறிய ரக மாடலாக காட்சியளிக்கிறது.
Advertising
Advertising

இதேபோன்று, இந்த மோட்டார் சைக்கிளில், பாகங்களை ஹைலைட் செய்து காட்டும் வகையில் சில இடங்களில், வண்ணம் மாற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இது, வாகனத்தின் தோற்றத்தை மேலும் ரம்மியமாக காட்சிப்படுத்துகிறது.  இதன் பின்பக்க தோற்றம் மற்றும் வண்ணக் கலவையானது யூரோ ஸ்பெக் மாடலில் இருக்கிறது. இந்த மோட்டார் சைக்கிளில் 124.7 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்ட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 14.5பிஎஸ் பவரை 9,250 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். இதே இன்ஜின்தான் கேடிஎம் டியூக் 125 மாடலில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின், முன்பக்கத்தில் இன்வெர்டட் போர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோசாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், முன்பக்க வீலில் 300 எம்எம் டிஸ்க் பிரேக், பின்பக்கம் 230 எம்எம் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. சிங்கிள் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியுடன் பொருத்தப்பட்டுள்ளது. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: