நான்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற மதிமுக பாடுபடும்: வைகோ பேட்டி

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். அப்போது, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் செங்குட்டுவன், சுப்ரமணி, மகேந்திரன், ஜீவன் உள்ளிட்டார் உடன் இருந்தனர். இந்த சந்திப்பிற்கு பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: அனைத்து வேட்பாளர்களையும், திமுக வேட்பாளராக கருதி கடுமையான பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். அவருக்கு மதிமுக சார்பில் நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தோம். 40ம் நமதே என்று சொன்னதில் ஒரு தொகுதியில் தேர்தல் நடக்கவில்லை. அந்த தேர்தலை நடத்தாமலேயே ஆம்பூர், குடியாத்ததிற்கு தேர்தல் நடத்தியது தேர்தல் ஆணையத்தின் ஒரு தலைபட்சமான செயலை காட்டுகிறது.அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளில் மே 19ல் இடைத்தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தல் குறித்து கருத்துக்களை நாங்கள் திமுக தலைவரிடம் பரிமாறி கொண்டோம். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் ெவற்றி பெற மதிமுக பாடுபடும். எங்களது நிர்வாகிகள் ஒரு அர்ப்பணிப்போடு பணியாற்றுவார்கள்.பாப்பிரெட்டிபட்டி பகுதிகளில் மறுவாக்குபதிவு நடத்த வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை நியாயமானது. தேர்தல் ஆணையம் இதை ஏற்றுக்கொண்டு அங்கு மீண்டும் மறுவாக்குபதிவு நடத்த வேண்டும். அதே போன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோளின் படி பொன்பரப்பியில் மறு வாக்குபதிவு நடத்த வேண்டும். பொது அமைதி நிலவ வேண்டும். அதற்கு காவல்துறை கலவர உணர்வை ஏற்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

பொன்னமராவதி பகுதிகளில் மக்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் அமைதி நிலவ வேண்டும். யாரோ இருவர் செய்த தவறான பிரச்சாரம் செய்தது மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது அமைதியை நிலைநாட்டுவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. பொன்பரப்பியில் ஏழை, எளிய மக்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அதை பார்க்கையில் வேதனையாக இருக்கிறது. இந்த நிகழ்வு வரவிடாமல் தடுக்காமல் காவல்துறை தவறி விட்டது. மோடிக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது. எக்காலத்திலும் பாஜ ஆட்சிக்கு வர முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: