மயிலாடுதுறை அருகே கும்பல் வெறிச்செயல் ஓட ஓட விரட்டி 2 வாலிபர்கள் சரமாரி வெட்டிக்கொலை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே முன்விரோதத்தில் இரட்டை கொலை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நீடூர் கீழத்தெரு காலனியை சேர்ந்தவர் இளங்கோவன் (60). இவர் அந்த காலனிக்கு நாட்டாமையாக இருந்து வருகிறார். இவரது குடும்பத்தாருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கண்ணதாசன், அவரது சகோதரர் சேட்டு என்கிற முருகையன் ஆகியோரது குடும்பத்தாருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த மார்ச் மாதம் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அடிதடி நடந்தது. இதில் இருதரப்பிலும் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் ஜாமீன் பெற்று காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இளங்கோவன் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கண்ணதாசன் குடும்பத்தார் திட்டமிட்டு அடியாட்களை வரவழைத்துள்ளனர். இதை அறியாமல் இரவு 9 மணிக்கு கீழத்தெரு மாரியம்மன் கோயில் அருகே சென்றுகொண்டிருந்த இளங்கோவன் மகன் இளவரசன் (35), அவரது உறவினர் தங்கமணி(32) ஆகியோரை 20க்கும் மேற்பட்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன்  வெட்டித்தள்ளியது.

Advertising
Advertising

இதை கேள்விப்பட்டு ஓடிவந்த இளங்கோ மகன் எழிலரசன், இளையராஜா, பாலு(50), சம்பந்தம்(60) உள்ளிட்ட 9 பேரை அந்த கும்பல் ஓடஓட விரட்டி வெட்டிவிட்டு தப்பி ஓடியது. உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அனைவரையும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  இதையடுத்து, மயிலாடுதுறை போலீசார், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். அனைவருமே உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் உடனே திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இளவரசன்(35), சம்பந்தம் மகன் தங்கமணி(32) ஆகியோர் உயிரிழந்தனர். இது குறித்து இளங்கோவன்  புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பின்னர், கண்ணதாசன் மகன்கள் திருமுருகன் (32), வினோத்(24), கஜேந்திரன் (55), ராஜ்மான்சிங்(29) ஆகியோரை கைது செய்தனர்.  மேலும் கண்ணதாசன், சேட்டு என்கிற முருகையன் உள்ளிட்ட 10 பேரை தேடிவருகின்றனர். பதற்றம் நிலவுவதால் 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: