நடராஜர் கோயிலில் சூட்டை தணிக்க கூல் பெயின்ட்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடும் வெயிலால் பிரகாரத்தில் உள்ள கற்களில் சூடேறி பக்தர்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனால் கற்களின் சூட்டை தணிக்கும் வகையில், கீழ கோபுர வாயிலில் இருந்து நடன பந்தல் வரை பிரகாரத்தில் கூல் பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது. இதனால் குளிர்ச்சியாக உள்ளதால் பக்தர்கள் எளிதாக நடக்க முடிகிறது. மேலும் பிரகாரங்களில் பக்தர்கள் நடப்பதற்காக ஆங்காங்கே தென்னங்கீற்றால் ஆன பந்தல்களும் போடப்பட்டுள்ளது. நடராஜ பெருமானுக்கு தினமும் அணிவிப்பதற்காக நைஜீரீய நாட்டை சேர்ந்த பவானிசங்கர், சிவசங்கரி தம்பதிகள், பவள மாலை ஒன்றை வழங்கியுள்ளனர். இதில், ₹7 லட்சம் மதிப்பிலான 90 கிராம் தங்கத்தில் 45 பவளங்கள் கோர்க்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: