கரூர் மக்களவை தொகுதி வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் பாதுகாப்பு இல்லை : காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி குற்றச்சாட்டு

கரூர்: கரூர் மக்களவை தொகுதி தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தளவாபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டார். பின்னர், அவர் அளித்த பேட்டி: வாக்குப்பதிவு செய்யப்பட்ட  இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில், அதிர்ச்சியளிக்கும் வகையில் பாதுகாப்புகள் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்குத்தான் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். வழக்கமாக 3 மற்றும் ஐந்தடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். கரூர் மக்களவை தொகுதியில் ஆரம்பம் முதலே, தேர்தல் அதிகாரியும், போலீஸ் உயரதிகாரிகளும் ஆளுங்கட்சியின் அராஜகத்துக்கு பணிந்து போகிற சூழல் நிலவியது. மாவட்ட கலெக்டருக்கும், எனக்கும் நடந்த செல்போன் உரையாடலை  தமிழகம் முழுதும் கேட்டுள்ளனர்.

தேர்தலை நிறுத்துவேன் என சொல்லும் அளவுக்கு அவர், அமைச்சருக்கும், வேட்பாளர் தம்பிதுரைக்கும் உடந்தையாக இருக்கிறார். வாக்கு இயந்திரங்கள் உள்ள கல்லூரி யின் முன் பகுதியில் 3 போலீசார், அடுத்து 6 போலீசார் இருக்கின்றனர். இது ஒரு பாதுகாப்பே கிடையாது. யாரும், எந்த நேரமும் வந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறை கேடு  செய்யும் சூழல் இருக்கிறது.  பாதுகாப்பு அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது குறித்து சென்னை மற்றும் டெல்லி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம். தேர்தல் ஆணையம் தலையிட்டு பாதுகாப்பை பலப்படுத்தும் என நம்புகிறோம். இவ்வாறு ஜோதிமணி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: