மதுரை சித்திரை திருவிழா கோலாகலம் விடிய விடிய அழகரின் தசாவதாரம்

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் நேற்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்றிரவு துவங்கிய ‘தசாவதாரம்’  விடிய விடிய நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சித்திரை திருவிழாவையொட்டி, மதுரை வண்டியூர் அருகே வைகையாற்று மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு அழகர் சாப விமோசனம் வழங்கும் நிகழ்வும், தேனூர் மக்களுக்கு மரியாதை அளிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதற்காக நேற்று காலை 6 மணியிலிருந்து வண்டியூர் வீரராகவபெருமாள் கோயிலில் அழகருக்கு ஏகாந்த சேவையும், தொடர்ந்து திருமஞ்சனமும் நடைபெற்றது. காலை 11 மணிக்கு வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோயிலில் இருந்து, சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபம் வந்து அழகர் காட்சியளித்தார். தேனூர் மண்டபத்தில் காலை 11 மணியிலிருந்து, மாலை 3 மணி வரை திருமஞ்சனமாகி, கருடவாகனத்தில் காட்சி தந்து மண்டூக முனிவருக்கு சாபம் போக்கும் நிகழ்வும் நடத்தப்பட்டது.

மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் வழங்கவே அழகர் மதுரை வைகையாற்றுக்கு வருகிறார் என்பதால், இந்த முக்கிய நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 3.30 மணிக்கு வண்டியூர் அனுமார் கோயிலுக்கு அழகர் வந்தடைந்தார். அங்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக அங்கப்பிரதட்சணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதன் தொடர்ச்சியாக. இரவு 11 மணிக்கு ராமராயர் மண்டபத்திற்கு அழகர் வந்தார். அங்கு மச்சம், கூர்மம், வாமன, ராமர், கிருஷ்ணர் உள்ளிட்ட தசாவதார அலங்காரங்கள் இரவு துவங்கி இன்று காலை வரை நடந்தது. தொடர்ந்து இன்று காலை மோகினி அவதாரத்துடன் பக்தி உலாத்துதல் நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: