மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சு பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் : திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் நேற்று நேரில் சந்தித்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டதற்காக நன்றியை தெரிவித்தோம். வருகின்ற நான்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக விசிக தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபடும். புதுச்சேரி உட்பட அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெரும். பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்த வலியுறுத்துகிறோம். இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியை சந்திக்க உள்ளோம். பொன்பரப்பியில் நடைபெற்ற மோதல் எதேச்சையானது அல்ல.

Advertising
Advertising

வாக்களிக்க வந்த சிலரை குடிபோதையில் இருந்த சிலர் பானை சின்னத்தில் வாக்களிக்க கூடாது எனக்கூறி வம்பிழுத்து தடுத்துள்ளனர். பின்னர், வாக்குசாவடி அருகிலேயே பானை சின்னத்தை உடைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின்னர், அருகில் உள்ள தலித் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் சென்று கடுமையாக தாக்கி வீடுகளை சேதப்படுத்தி வன்முறை செய்துள்ளனர். பாமக, இந்து முன்னனியினர் சேர்ந்தே இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது பெயர்களை குறிப்பிட்டு புகார் அளித்தும் இதுவரையில் கைது செய்யாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும். இதேபோல், வாக்குசாவடியை கைப்பற்றியும் வாக்களித்துள்ளனர். எனவே அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: