×

பாதுகாப்பு காரணங்களுக்காக விங் கமாண்டர் அபிநந்தன் பணியிட மாற்றம்

டெல்லி: பாதுகாப்பு காரணங்களுக்காக விங் கமாண்டர் அபிநந்தன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பால்கோட் பகுதியிலுள்ள பயங்கரவாதிகளின் முகாமில் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த எஃப் 16 ரக விமானத்தை இந்தியாவின் மிக் 21 ரக போர் விமானத்தை கொண்டு விரட்டியடிக்கப்பட்டது. அப்போது மிக் 21 ரக விமானத்தை இயக்கிய அபிநந்தன் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டார்.

இரண்டு நாட்களுக்குப் பின்னர் அபிநந்தன் பாகிஸ்தான் அரசால் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து இந்தியா திரும்பிய அபிநந்தனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அத்துடன் அவரிடம் விமானப் படை சார்பில் விசாரணையும் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அபிநந்தனிற்கு மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டது. அபிநந்தன் கூடிய விரைவில் மீண்டும் விமானத்தை இயக்குவார் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் இருந்து மேற்குப்பகுதி விமானப்படை தளத்திற்கு அபிநந்தன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீநகர் பகுதியில் அவரது பாதுகாப்புக்கு சிக்கல் இருப்பதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு போர்க்கால வீர தீர செயலுக்கான வீர் சக்ரா விருது வழங்க இந்திய விமானப்படை பரிந்துரை செய்துள்ளது. பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Abhinandan Workplace Transfer , Apinantan, Transfer
× RELATED கொரனா வைரஸ் பாதிப்புக்குள்ளான கேரள...