ஐபிஎல் 2019: மும்பை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி

ஜெய்ப்பூர்: இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக  டீ காக் 65, சூர்யகுமார் யாதவ் 34, ஹர்திக் பாண்டியா 23 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணியில் கோபால் 2, பின்னி 1, ஆர்ச்சர் 1, உனத்க்கட் 1 விக்கெட் வீழ்த்தினர்.

Advertising
Advertising

162 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்மித் 58, பராக் 43, சாம்சன் 35 ரன்கள் எடுத்தனர். மும்பை அணி தரப்பில் சாஹர் 3, பும்ரா 1 விக்கெட் வீழ்த்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: