மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது..பாஜக-வை கலாய்த்த மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் உங்களுக்கு வெற்றி எல்லாம் கிடைக்காது, ரசகுல்லா வேணும்னா கிடைக்கும் என பாரதிய ஜனதாவினரை கிண்டலடித்துள்ளார் மம்தா பானர்ஜி. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தக்ஷின் தினாஜ்பூர் மாவட்டத்திலுள்ள பாலுர்காட் மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது பேசிய அவர் மேற்கு வங்கத்தில் தாங்கள் வெற்றி பெற்றால் லட்டு கிடைக்கும் என்று பேசிய மோடியை கிண்டல் செய்தார் மேற்குவங்க மாநிலத்தில் பெரிய எண்ணிக்கையில் வெற்றி பெறுவோம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் பாஜகவுக்கு ரசகுல்லாதான் கிடைக்கும் என்றார்.

Advertising
Advertising

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தன்னை டீ விற்பவராக காட்டிக் கொண்ட மோடி இப்போது தன்னை சவுகிதார் என்று கூறிக்கொள்கிறார் ஆனால் தேர்தல் முடிந்த பின் அவருடன் சவுக்கி(கட்டில்) மட்டுமே இருக்கும் என்றார். ஆந்திரா, கேரளா தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஒரு இடத்தை கூட பாஜக பெறாது. மொத்தம் 100 இடங்களைக் கூட பாஜக வெல்லாது. இப்போதே பல அட்டூழியங்களை செய்து வரும் பாஜக மீண்டும் வென்றால் நாம் பேசுவற்கு கூட கட்டுப்பாடு விதிப்பார்கள் என்றும் கூறினார். மேற்கு வங்கத்தில் பாதிக்குப்பாதி இடங்களையாவது பிடிக்க இலக்கு வைத்துள்ளார்கள் பாரதிய ஜனதாவினர் ஆனால் அவர்களுக்கு லட்டுவுக்கு பதிலாக ரசகுல்லாதான் (பூஜ்ஜியம்) கிடைக்கும். கடந்த 2014 ம் ஆண்டு தேர்தலிலாவது 2 இடங்களை வென்றார்கள் ஆனால் இந்த தேர்தலில் ஒரு இடத்தை கூட அவர்கள் பெறப் போவதில்லை என்று மம்தா கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: