திகார் சிறையில் கொடுமை... முஸ்லீம் நபரின் முதுகில் பழுக்க காய்ச்சிய கம்பியால் 'ஓம்

டெல்லி: திகார் சிறை கைதி ஒருவரின் முதுகில், பழுக்க காய்ச்சிய கம்பியால் ஓம் என எழுதிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. டெல்லி திகார் சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ள, நபீர் என்ற முஸ்லிம் கைதியின், முதுகில் பழுக்க காய்ச்சிய கம்பியால் ஓம் என்று எழுதி உள்ளனர். சிறை கண்காணிப்பாளர் ராஜேஷ் சவுகான் இந்த செயலை செய்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விசாரணைக் கைதி, தனது வழக்கறிஞர் மூலம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக சிறைத்துறை டிஜிபி மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

Advertising
Advertising

சிறையில் நடந்த கொடூர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி 24 மணி நேரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும், சிறையில் உள்ள அனைத்து சிசிடிவி பதிவுகள் மற்றும் மற்ற கைதிகளின் வாக்குமூலங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கைதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறை கண்காணிப்பாளரை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, நபீர் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், டிஜஜி தலைமையில் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: