நீதித்துறைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது : தம் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கருத்து

டெல்லி : நீதித்துறைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று தம் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கருத்து தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தம் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கருத்து கூறினார்.

அப்போது அவர் பேசியது பின்வருமாறு,உச்சநீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் தகுந்த முறையில் நடத்தப்படுகின்றனர்; பாலியல் புகார் கூறும் பெண் ஒன்றரை மாதம் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் பணியாற்றினார்; அப்போதே இந்த புகார் வந்தது; இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வது அவசியமில்லை என கருதினேன்; எனது பதவிக்காலம் முடியும் வரை பயமில்லாமல் பணியாற்றுவேன்; நீண்ட புகார் ஒன்றை கூறிவிட்டு உடனடியாக பதிலளிக்க 10 மணி நேரம் கொடுத்தார்கள் ;நாட்டு மக்களுக்கு நான் சொல்வதெல்லாம் நீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது;  20 வருடங்களாக தூய்மையாக பணியாற்றியதற்கான அங்கீகாரமாகவே இந்த புகாரை கருதுகிறேன்; அடுத்த வாரம் சில முக்கிய வழக்குகளை கையாள இருக்கிறேன். அதனை தடுக்கும் முயற்சியாக இதனை பார்க்கிறேன் என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: