இம்புட்டா குடிப்பாங்க? அம்புட்டுதான் போங்க

புதுடெல்லி: வெயில் வந்தாலே தொண்டை வறண்டு போய்விடும். தண்ணீர், இளநீர், மோர், எலுமிச்சை இப்படி கோடையின் கொடுமையை தணிப்பதற்கு பாரம்பரிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஆனாலும், ஸ்டைலாக கூல்டிரிங்க் குடிப்பது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக, குளிர்பான விற்பனை நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியுள்ளது. அதன்படி, ஒரு நபர் ஆண்டுக்கு 44 பாட்டில் கூல்டிரிங்க் குடிக்கிறாராம். இது லேட்டஸ்ட் அல்ல, 2016ம் ஆண்டு கணக்கு. ஆனாலும், அமெரிக்காவோடு போட்டி போட முடியாது. அங்கு ஆண்டொன்றுக்கு ஒருவர் 1,496 பாட்டில் காலி செய்கிறார். ஏறக்குறைய தண்ணீருக்கு பதில் கூல்டிரிங்க்ஸ்தான் குடிப்பார்கள் போலிருக்கிறது.

இதற்கு அடுத்த இடம் மெக்சிகோ.
Advertising
Advertising

இங்கு ஆண்டு ஒன்றுக்கு 1,489 பாட்டில்களும், ஜெர்மனயில் 1,221 பாட்டில்கள், பிரேசிலில் 537 பாட்டில் கூல்டிரிக்சை ஒரு நபர் ஓராண்டில் குடிக்கிறார்.  இந்தியாவில் குறைவுதான் என்று அந்த ஆய்வு குறைப்பட்டுக்கொள்கிறது. ஆனாலும், 2021ம் ஆண்டில் இது ஏறக்குறைய இரட்டிப்பாகும். அதாவது ஒரு நபர் ஓராண்டில் 84 பாட்டில் கூல்டிரிங்க்ஸ் குடிப்பார் என்று உத்தேச சராசரி கணக்கு வெளியிட்டுள்ளது அந்த ஆய்வு. இளநீர், நுங்கு, தென்னை மட்டை நிழல் என சுகம் கண்டு வந்த பல கிராமங்கள் நூறு சதவீதம் மின்சார வசதி பெற்று விட்டன.

இதுவும் கூல்டிரிங்க்ஸ் தொழிலுக்கு கைகொடுத்து வருகிறது, மேலும் கைகொடுக்கும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. போகிற போக்கை பார்த்தால், தண்ணீர் பற்றாக்குறையால் வறண்டு போன கிராம பகுதியில், கூல்டிரிங்ஸ் கூலிங்கிளாஸ் சகிதமாக சுற்றும் நிலை கூட வரலாம். நினைத்துப்பார்த்தாலே நடுங்க வைக்கிறது இந்த புள்ளி விவரம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: