எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு தடை மிளகாய், மாம்பழம், உலர் பழம் உட்பட 21 பொருட்களின் விற்பனை பாதிக்கும்: வியாபாரிகள் தவிப்பு

புதுடெல்லி: எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு இந்தியா விதித்துள்ள தடையால், மிளகாய், மாம்பழம், மூலிகைகள் உட்பட 21 பொருட்களின் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டில் இருந்து காஷ்மீரில் பாரமுல்லாவில் உள்ள சலாம்பாத், ஜம்முவில் உள்ள பூஞ்ச் மாவட்டம் சக்கன் - டா - பாக் பகுதியில் எல்லை தாண்டிய வர்த்தகம் நடைபெற்று வருகிறது. 2017ம் ஆண்டு வரை இந்த வர்த்தகம் உரி வர்த்தக மையத்தில் ரூ.4,400 கோடியையும், பூஞ்ச் பகுதியில் ரூ.2,542 கோடியையும் எட்டியுள்ளது.

மொத்தம் ரூ.6,900 கோடியை எட்டியுள்ள இந்த வர்த்தகம் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு விடுத்த அறிக்கையில், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் சில சக்திகள், எல்லை தாண்டிய வர்த்தகத்தை பயன்படுத்தி ஆயுதங்கள், போதைப்பொருட்கள், போலி ரூபாய் நோட்டுக்களை கடத்த பயன்படுத்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து காஷ்மீரில் பாரமுல்லாவில் உள்ள சலாம்பாத், ஜம்முவில் உள்ள பூஞ்ச் மாவட்டம் சக்கன் - டா - பாக் பகுதியில் நடந்து வந்த எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

இந்த வர்த்தகத்தில் நேரடியாக ஈடுபட்டு வந்த 280 வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மிளகாய் வற்றல், மாம்பழம், மூலிகைகள், உலர் பழங்கள் உட்பட 21 பொருட்களின் வர்த்தகம் இங்கு அமோகமாக நடக்கும். இவற்றின் விற்பனை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் தவித்து வருகின்றனர். துவக்கத்தில் இந்த வர்த்தக சந்தை வாரம் 2 நாட்கள் நடைபெற்று வந்தது. 2011, அக்டோபர் 15 முதல் இது வாரம் 4 நாட்கள் செயல்படுகிறது. மத்திய அரசின் தடை நடவடிக்கைக்கு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: