மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

டெல்லி: மும்பை இந்தியன்ஸ் அணியிடம் சவாலே இல்லாமல் டெல்லி கேப்பிடல் அணி தோல்வி அடைந்தது. அந்த அணியில் 7 பேர் ஒற்றை இலக்க ரன்னில் விக்கெட்டை இழந்தனர்.ஐபிஎல் தொடரில் 34வது லீக் போட்டி நேற்று டெல்லியில் நடைப்பெற்றது. இந்தப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள் 2வது முறையாக மோதின.ஏற்கனவே நடைப்பெற்ற முதல் போட்டியில் டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.இந்நிலையில் நேற்று நடைப்பெற்ற போட்டியில்  டாஸ் வென்ற  மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மாவும், விக்கெட் கீப்பர் டீ காக்குவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டெல்லி பந்து வீச்சாளர்கள் 4 பேர் பந்து வீசியும் அந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. அதனால் மும்பை அணி 6 ஓவர்களில் 50 ரன்களை கடந்தது.

Advertising
Advertising

அடுத்து 5வதாக பந்து வீச வந்த அமீத் மிஸ்ரா  ஓவரில் ரோகித்  சர்மா ஆட்டமிழந்தார். தொடர்ந்து 6வதாக பந்து வீச  அக்சர் பட்டேல் பந்து வீச்சில்  பென் கட்டிங்  ஆட்டமிழந்தார்.  அடுத்த 10வது ஒவரில் டீ காக் ரன் அவுட்டானர். அப்ேபாது அணியின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள். பிறகு களம் இறங்கிய யாதவ் 26 ரன்னில் அவுட் ஆனார். இதன் பிறகு களம் இறங்கிய குருணால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா ஆடிய அதிரடி ஆட்டத்தில் மும்பை இந்தியன் அணி 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன் குவித்தனர். ஹர்திக் பாண்டியா 15 பந்தில் 3 சிக்ஸர் உள்பட 32 ரன் அடித்தார். குருணால் பாண்டியா கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 26 பந்தில் 5 பவுண்டரியுடன் 37 ரன் குவித்தார்.அடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் பிரித்விஷா, தவான் ஜோடி நல்ல துவக்கத்தை தந்தனர். ஆனால் அவர்களை தொடர்ந்து வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். இதனால் அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் 7 பேர் ஒற்றை இலக்க ரன்னில் தங்கள் விக்ெகட்டை பறிகொடுத்தனர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: