கால்நடை மருத்துவமனை ஊழியரிடம் செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது

சென்னை: கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியை சேர்ந்தவர் அன்பு (48). எழும்பூர் கால்நடை மருத்துவமனை ஊழியர். கடந்த 12ம் தேதி இரவு, தனது பணியை முடித்து விட்டு அன்பு மின்சார ரயில் மூலம் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் அன்பு அவரது வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

Advertising
Advertising

அப்போது 2 வாலிபர்கள் அவரை வழிமறித்து செல்போன் மற்றும் பணத்தை தரும்படி கேட்டு மிரட்டினர். அன்பு கொடுக்க மறுத்து வாலிபர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் 2 வாலிபர்களும் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் அவரது தலையில் தாக்கி செல்போன் மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 2 வாலிபர்களையும் தேடி வந்தனர். இந்தநிலையில் போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர்கள் வடபழனி பகுதியை சேர்ந்த பிரபாகரன் (20) மற்றும் ரஞ்சித் (21) என்பது தெரியவந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: