வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அமமுக கட்சியினர் 2 பேர் கைது

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை நடக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை நேற்று மாலை 5 மணிக்கு முடித்தன. இதற்கிடையே தென் சென்னை தொகுதிக்கான சைதாப்பேட்டை பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தேர்தல் பறக்கும் படையினர் சைதாப்பேட்டை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.  தகவல் அறிந்த திமுக உள்ளிட்ட கட்சிகள் சைதாப்பேட்டை பகுதியில் ஒன்று கூடினர்.

Advertising
Advertising

அப்போது வாக்காளர்களுக்கு தலா ₹200 கொடுத்ததாக  அமமுகவை சேர்ந்த குமார் மற்றும் பாபு ஆகிய 2 பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின்படி குமரன் நகர் போலீசார் பாபு மற்றும் குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் பணம் குறித்து இருவரிடமும் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: