காதலியை கொன்ற வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை

சென்னை:  சென்னை அங்கப்பன் நாயக்கர் தெருவை சேர்ந்த  இளம்பெண் வினோதினி என்பவரை நன்மங்கலம், இந்திரா நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் காதலித்து வந்துள்ளான். இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு வினோதினி  கொலை செய்யப்பட்டார்.  வடக்கு கடற்கரை காவல்நிலைய போலீசார் விசாரணையில் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் வினோதினியை காதலன் கொலை செய்தது தெரியவந்தது.  சிறுவனை கைது செய்த போலீசார், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு சென்னையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வக்கீல் லேகா ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி சிறுவன் என்பதால் 3 ஆண்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வைத்து கண்காணிக்க உத்தரவிட்டார். வினோதினி காதலனைவிட பெரிய பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: