கடந்த நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 331 பில்லியன் டாலர்களை எட்டியது

டெல்லி: கடந்த நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 331 பில்லியன் டாலர்கள் என்ற புதிய சாதனை அளவை எட்டியுள்ளது. 2013-14 நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 314 பில்லியன் டாலர்கள் என்ற அளவை எட்டியதே, சாதனை அளவாக இருந்தது. இந்நிலையில், கடந்த நிதியாண்டில் ஏற்றுமதி 331 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.

Advertising
Advertising

கடந்த மார்ச் மாதத்தில் ஏற்றுமதி 11 சதவீதம் அதிகரித்து 32.5 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது இதற்கு முக்கிய காரணம். மிகவும் சவாலான உலகளாவிய சூழலில், ஏற்றுமதி அளவில் இந்த சாதனை எட்டப்பட்டிருப்பதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.இதனிடையே, ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகரித்திருப்பதால் வர்த்தகப் பற்றாக்குறை அளவும் அதிகரித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: