ஜாதி, மதங்களை முன் வைத்து தேர்தல் ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை தேவை: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

டெல்லி: சாதி, மதத்தை முன்னிறுத்தி வாக்கு கேட்கும் அரசியல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டயது தேர்தல் ஆணையத்தின் கடமை எனவும் தெரிவித்துள்ளது. உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் மாயாவதி, அகிலேஷ் யாதேவ், யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் அந்ததந்த தொகுதிகளில் அவர்கள் பிரச்சாரம் செய்யும் போது ஜாதி, மத ரீதியிலான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர் என பொதுவான ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இது அதிகமாக இருக்கிறது என்ற ஒரு கருத்துடன் அதனை தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும் என ஹார்பிக் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பல்வேறு கோரிக்கைகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் முன்வைத்தது. குறிப்பாக விதிமுறையை மீறும் கட்சியின் மீதோ, அல்லது குறிப்பிட்ட வேட்பாளருக்கு எதிராக தங்கள் நோட்டிஸ் பிறப்பிக்க முடியும்,

வழக்கு பதிவு செய்ய முடியும், ஆனால் அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை. எனவே தொடர்ந்து இந்த தேர்தல் விதிமீறல்களில் தொடர்ந்து வேட்பாளர்கள் நடந்து வருகின்றனர் என இந்திய தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது. அதற்கு பதிலளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்துக்கு உட்பட்டு சாதி, மத ரீதியில் வாக்காளர்களை கவரும் வகையில் தேர்தல் பரப்புரை யார் மேற்கொண்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டயது தேர்தல் ஆணையத்தின் கடமை எனவும் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED திருவண்ணாமலை வெம்பாக்கம் பகுதியில்...