இந்தியாவில் களமிறங்கும் சீன பைக்குகள்

சீனாவை சேர்ந்த சிஎப் மோட்டோ நிறுவனம் ஸ்போர்ட்ஸ் ரக பைக் தயாரிப்பில் அந்நாட்டில் சிறந்து விளங்குகிறது. இந்நிலையில், இந்திய சந்தையில் கால் பதிப்பதற்கான முயற்சிகளை சிஎப் மோட்டோ இறங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக தனது பைக் மாடல்களை இந்திய சாலைகளில், சோதனை ஓட்டம் செய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த மாதம் சிஎப் மோட்டோ நிறுவனம் இந்தியாவில் தனது பைக் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. முதலில் மூன்று மாடல்களை அந்நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதும் தெரியவந்துள்ளது. அறிமுக விழாவில் மொத்தம் 5 மாடல்களை இந்தியர்களின் பார்வைக்கு கொண்டு வர இருப்பதாக அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சிஎப் மோட்டோ நிறுவனத்தின் 300NK, 650NK, 650MT, 400NK, 650GT ஆகிய மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதில், சிஎப் மோட்டோ 300NK மாடல்தான் முதலாவது மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட இருக்கிறது. இதனுடன் சேர்த்து 650NK மற்றும் 650MT மாடல்களும் விற்பனைக்கு களமிறக்கப்படும்.

பிற மாடல்களான 400NK மற்றும் 650GT ஆகிய இரு மாடல்களும் தீபாவளிக்கு முன்னதாக பண்டிகை காலத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில், முதலாவதாக வரும் 300NK மாடலானது பிஎம்டபிள்யூ ஜி310ஆர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். பெங்களூரை சேர்ந்த AMW நிறுவனத்துடன் கூட்டடணி அமைத்து இந்தியாவில் பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வருகிறது சிஎப் மோட்டோ நிறுவனம். மேலும், ஹைதராபாத்தில் உள்ள AMW நிறுவனத்தின் ஆலையில் இந்த பைக்குகள் அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது. கேடிஎம், பெனெல்லி, கவாஸாகி உள்ளிட்ட நிறுவனங்களின் பைக் மாடல்களுடன் சிஎப் மோட்டோ நிறுவனத்தின் பைக்குகள் போட்டி போடும். போட்டியாளர்களைவிட விலையை சவாலாக நிர்ணயிக்கும் திட்டமும் சிஎப் மோட்டோவிடம் இருக்கிறது. எனவே, சந்தைப்போட்டி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: