எம்ஜி ஹெக்டர் 7-சீட்டர் அறிமுகம்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எம்ஜி ஹெக்டர் 5-சீட்டர் பிரீமியம் எஸ்யூவி ரக கார் வரும் மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா ஹாரியர் மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட கார்களுக்கு கடும் போட்டியை வழங்கவுள்ள எம்ஜி ஹெக்டர் 5-சீட்டர் பிரீமியம் எஸ்யூவி ரக கார் மாடலின் விலை ரூ.13.50 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதில், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஹெக்டர் பிரீமியம் எஸ்யூவி ரக காரின் 7-சீட்டர் வெர்ஷனையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2020ம் ஆண்டின் முதல் பாதியில் எம்ஜி ஹெக்டர் 7-சீட்டர் காரை அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, அடுத்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தெரிகிறது.

 தற்போது, சீன மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள பயோஜன் 530 காரின் ரீ-இன்ஜினீயரிங் செய்யப்பட்ட மாடல்தான் எம்ஜி ஹெக்டர் என்பது பலருக்கு தெரியாத விஷயம். எம்ஜி மோட்டார்ஸ் மற்றும் பயோஜன் நிறுவனங்களின் உரிமையாளரான செயிக் மோட்டார் கார்ப்பரேஷன், 7-சீட்டர் பயோஜன் 530 காரையும் விற்பனை செய்து வருகிறது.
Advertising
Advertising

எனவே 7-சீட்டர் பயோஜன் 530 காருடன், இன்டீரியர் மற்றும் டிசைனை, எம்ஜி ஹெக்டர் 7-சீட்டர் கார் பகிர்ந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஹெக்டர் 5-சீட்டர் பிரீமியம் எஸ்யூவி ரக காருக்கு பிறகு எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ள மாடல் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார். இதுதான் இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி நிறுவனத்தின் இரண்டாவது மாடல். நடப்பாண்டின் இறுதிக்கு முன்பாக எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின்புதான், எம்ஜி ஹெக்டர் 7-சீட்டர் மாடல் கார் விற்பனைக்கு களமிறங்குகிறது. எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார், இந்தியாவிற்கு சிபியூ யூனிட்டாக இறக்குமதி செய்யப்பட உள்ளது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ வரை பயணிக்க முடியும். எம்ஜி நிறுவனம், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ள முதல் 5 மாடல்கள் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவைதான். இதில் ஹெக்டர் 5 சீட்டர், இஸட்எஸ் எலெக்ட்ரிக், ஹெக்டர் 7 சீட்டர் என 3 மாடல்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. மீதமுள்ள 2 மாடல்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகிவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: