பவர்புல்லான மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ35

கடந்த ஆண்டு பாரிஸ் மோட்டார் ஷோவில் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ35 ஹேட்ச்பேக் ரக கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அடிப்படையிலான மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ35 செடான் கார் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரில் 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக காரின் நான்கு சக்கரங்களுக்கும் இன்ஜின் சக்தி கடத்தப்படுகிறது. இந்த ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக, இந்த கார் 0-100 கி.மீ என்ற வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் விதத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 5 விதமான டிரைவிங் மோடு வழங்கப்பட்டுள்ளன.இந்த காரின் முன்சக்கரங்களில் 4 பிஸ்டன் காலிபர்களுடன் 350 மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்குகளும், பின்சக்கரங்களில் சிங்கிள் பிஸ்டன் காலிபர் பொருத்தப்பட்ட 330 மிமீ டிஸ்க் பிரேக்குகளும் உள்ளன.

Advertising
Advertising

பிரேக் பிடிக்கும்போது டிஸ்க்குகள் அதிகம் சூடாவதை தவிர்ப்பதற்காக காற்று எளிதாக புகுந்து வரும் வகையில் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. வழக்கம்போல், ஏஎம்ஜி பிராண்டு கார்களுக்குரிய விசேஷ கிரில் அமைப்பு, பம்பர்கள் இடம்பெற்றுள்ளன. கவர்ச்சியை சேர்க்கும் பல விசேஷ ஆக்சஸெரீகளும் உள்ளன. ஏஎம்ஜி பிராண்டின் ஸ்போர்ட்ஸ் லெதர் இருக்கைகளும் இந்த காரின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. மேலும், விசேஷ இன்போடெயின்மென்ட் சாதனமும் உள்ளது. மெர்சிடிஸ் ஏஎம்ஜி பிராண்டில் வரும் குறைவான விலை செடான் மாடல் என்பதால் வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: