தேர்தல் நடத்தை விதிகள் மீறல்: காங்கிரஸ் மீது பாஜ புகார்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் விதி மீறல்களுக்காக காங்கிரஸ் கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு பாஜ கடிதம்  எழுதியுள்ளது.   மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் கடந்த மாதம் 10ம் தேதி முதல் அமலில் உள்ளன. காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜ பரஸ்பரம் ஒருவர்  மீது ஒருவர் தேர்தல் நடத்தை விதி மீறல்களில் ஈடுபட்டதாக புகார் கூறி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல்  ஆணையத்துக்கு டெல்லி பாஜ கடிதம் எழுதியுள்ளது.

Advertising
Advertising

பாஜவின் டெல்லி பொதுச் செயலாளர்  ராஜேஷ் பாட்டியா தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள  கடிதத்தில், இந்தியா கேட் ரவுண்டானா அருகே இரு ஆட்டோ ரிக்‌ஷாக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஹைபை சொல்லுங்கள் என்ற வாசகங்களுடன் உள்ள  பேனர்கள் கட்டப்பட்டு பிரசாரம் செய்து வருகின்றன. இதன் மூலம் ஆட்டோ ரிக்‌ஷாக்களை அக்கட்சி பிரசாரத்துக்கு ஈடுபடுத்தி வருகிறது . பொது பயண வாகனமான ஆட்டோ ரிக்‌ஷாவில் பிரசாரம் செய்ய யார் அனுமதி கொடுத்தது? எனவே தேர்தல் ஆணையம் புகாரை விசாரித்து காங்கிரஸ்  கட்சி மீது தேர்தல் விதி மீறல்களுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: