உலகம் பலவிதம்

சட்டசபையில் குஷியோ குஷி ஸ்கூல் பசங்க தான் பரிட்சை முடிஞ்சதும், புத்தகத்தை கிழிச்சு, வீசி எறிந்து ஆட்டம் போடுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில்...  சட்டசபை கூட்டத் தொடரின் கடைசி நாள் நிறைவடைந்ததும் அவை உறுப்பினர்கள் காகிதங்களை கிழித்து எறிந்து மகிழ்வதைப் பாருங்கள்.

Advertising
Advertising

வெற்றி  கொண்டாட்டம் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் வசம் இருந்த பெரும்பாலான பகுதிகள் மீட்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மீட்கப்பட்ட பகுதிகளில் ஹசகாவும் ஒன்று. இங்கு, குர்திஷ் பெண்கள் பாதுகாப்பு படை வீராங்கனைகள் வெற்றிக்கு நடுவே பாரம்பரிய நடனமாடி மகிழ்கின்றனர்.

சுவிஸ் பனிமழை சுவிட்சர்லாந்தில் பனி மழை கொட்டி வருகிறது. செயின்ட் லெகியர் நகரின் நெடுஞ்சாலை எங்கிலும் பனி போர்த்தி காணப்படுகிறது.

பிங்க் ஏரி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் வெஸ்ட்கேட் பூங்காவில் உள்ள ஏரி பிங்க் நிறத்தில் காட்சி அளிக்கிறது. இந்த ஏரி, பிங்க் நிறமாக மாறக் காரணம், கடுமையான வெயில் காரணமாக நீர் அதிக அளவில் ஆவியாகி,ஏரியில் உப்புத்தன்மை அதிகரித்துள்ளதே காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். இது முழுக்க முழுக்க இயற்கையான நிகழ்வே. பிங்க் ஏரியை சுற்றுலா பயணிகள் பலர் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர். உப்புத்தன்மை அதிகமுள்ள இந்த ஏரி நீரில் இறங்க பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அகதிகளாக குழந்தைகள் பல்வேறு நாடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் அகதிகளாக ஐரோப்பியாவில் நுழைய கிரீஸ் நாட்டின் எல்லையில் தஞ்சமடைந்துள்ளனர். அகதிகள் முகாமில் தங்கியுள்ள அவர்களை எல்லை தாண்ட விடாமல் கிரீஸ் அரசு தடுத்துள்ளது. இதனால் முகாமில் உள்ள அகதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை தடுக்க வந்த போலீசாரிடம் அகதிகளின் குழந்தைகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: