வாட்டி வதைக்கிறது கோடை வெயில் அம்மை நோயை தவிர்ப்பது எப்படி?

தமிழகத்தில் வெயில் வாட்டி எடுக்க ஆரம்பித்து விட்ட நிலையில், தற்போது வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் அம்மை நோய், நீர்கடுப்பு, உடல் அரிப்பு, சூட்டு கட்டி உள்ளிட்ட நோய்கள் ஏற்படக் கூடும். கோடைக்கால வெயில் ஒரு புறம். கோடை கால நோய்களின் வேதனை மறுபுறம். இவை அனைத்தும் கோடைக் கால தொல்லை மற்றும் நோய்கள் ஏற்பட காரணமாகும்.

வெயிலை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து பொதுமக்களுக்கு அரசு மருத்து வர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர். இதுகுறித்து அரசு  ஹோமியோ மருத்துவ அலுவலர் டாக்டர் வெண்மணி கூறுகையில், அம்மை நோய்கள் அதாவது சின்னம்மை நீர்கொள்வான், தட்டம்மை , தாளம் மை போன்றவை  வைரஸ் காரணி மூலம்  பரவும் கோடைகால நோய்களாகும். தும்மல் இருமல் நேரடி தொடர்புகள் மூலம் அம்மை நோய் பரவக்கூடியது.

இந்நோய் காரணிகள் உடலில் உட்புகுந்து 14 லிருந்து, 18 நாட்களுக்கு பிறகு நோயின் முதல்  அறிகுறிகள் தென்படத் துவங்கும். அம்மை கொப்பளங்கள் எந்தப்பகுதியில் பரவத் துவங்குகிறதோ அதுவே நோய் குறித்த  அறிவினை தருகிறது. உதாரணமாக தட்டம்மை வாயின் உட்புறம் துவங் கும்.  தாளம்மை முகத்தின் இருபுறம் செவியின் கீழ்பகுதியில் வீக்கம் போல் தென் படும். பசியின்மை, சளித் தொல்லை, காய்ச்சல், தலைவலி, தொண்டை  முதுகு வலி இருமல்   ஆகியவை அம்மையின் பொதுவான அறிகுறிகள். அம்மை கொப் பளங்கள் பின்னர் அலை அலையாய் தோன்றும்.

இச்சமயத்தில் நோயாளியை பள்ளி அலுவலகம் உள்ளிட்ட பணிகளுக்கு செல் லாதபடி நேரடி தொடர்பிலிருந்து அப்புறப்படுத்தி ஓய்வாகவும் வைக்க வேண்டும். குழந்தைகளை மென்மையாக பாதுகாப்பாக தொடர் கண்காணிப்பில் தாயும், பெற்றார்களும் மருத்துவரின் ஆலோசனை பெற்று சிகிச்சை அளிக்க வேண்டும். நோயாளியின் கொப்பளங்கள் உடைந்து நீர் கசிந்து பரவாமல் இருக்க பருத்தி கையுறை  காலுறை  அணிந்து தூய்மையான படுக்கையில் வைத் திருப்பது நல்லது.

ஹோமியோபதியில் நோயாளி மற்றும் நோய் தன்மைகளுக்கேற்ப ரெஸ்டோஸ் போன்ற சிறந்த மருந்துகளும் பாதிப்பு அதிகம் உள்ள போது ஆண்டிம்கார்ட் போன்ற மருந்துகளும்  தட்டம்மையால் அரிப்பு இருமல் அதிகமாக இருக்கும் போது ஆண்டிங்குரூட்  போன்ற மருந்துகளை கொடுப்பதற்கு நோ யாளியை பரிசோதித்து மருத்துவர்கள்  முடிவு செய்வார்கள்.

ஓமியோபதி மருத்துவ முறையில் அம்மைக்கான தடுப்பு முறைகளும் சிகிச்சையும் எளிமையானவை. அம்மை நோய்க்கான மருந்துகளை முறையாக மருத்துவரின் ஆலோசனைபடி உட்கொண்டால்  நோய் நிரந்தரமாக உடலை விட்டு விலகி விடும். இரண்டாம் தொற்று என்ற பயமின்றி  குறுகிய காலத்தில் இயல்பு வாழ் க்கைக்கு நோயாளி திரும்பி விடலாம்.

நோய் முற்றிலும் குணமாகி விட்டதா என்பதை உறுதி செய்து கொள்ள அருகா மையில் உள்ள மருத்துவரை அணுகினால்  நோயாளியின் வயது, அவரது நோய் எதிர்ப்பியல்பு, நோயின் தன்மை இவைகளை கொண்டு மருத்துவர்  தீர்மானித்து முடிவு செய்வார். தட்டம்மை, சின்னம்மை, தாளம்மை நோய்கள்  வருமுன் காப்பது ஹோமி யோபதியில் மட்டுமே சாத்தியம் என்பது நன்கு நிரூபிக்கப் பட்ட உண்மையாகும்.

அம்மை நோய்க்கான காலம்

பல்வேறு தொழில் மய மாசுபாடு காரணங்களால் உலகின் வெப்பநிலை உயர் ந்தும் மாறியும் வருகிறது.  மார்ச் துவக்கத்திலிருந்து கோடை துவங்கி ஏப்ரல் மே மாதங்களில்  வெப்பம் தகிக்கக் துவங்கும். இந்த மூன்று மாதம் தான் பெரும் பாலும் அம்மை நோய்க்கான காலமாகும்.  இந்த மூன்று மாதத்தில் உடலில் நீர் சமநிலையை தொடர்ந்து பராமரிக்க அன்றாடம் சராசரியாக 3 லிட்டருக்கு குறை யாமல் நீர் பருக வேண்டும்.

எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்

உணவில் காரம், உப்பு, எண்ணை அளவை பாதியாக குறைத்துக் கொள்வது நல் லது. எண்ணையில் வறுத்த காரமான உப்பு அதிகமுள்ள உணவு வகைகளை குறிப்பாக ஏப்ரல் மே மாதங்களில் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே நாம் நீண்ட காலமாக பழக்கப்படுத்திக் கொண்டிருக்கும் உணவு மற்றும்  சுவை விருப்பம்  பாவனை விருப்பத்தை தற்காலிகமாக மாற்றிக்  கொள்வது நல்லது.

இறுக்கமில்லாத பருத்தி ஆடை

எளிதில் கிடைக்க கூடிய நீர் அதிகம் கொண்ட பழங்களான தர்பூசனி, ஆரஞ்சு,  நாரத்தை எலுமிச்சையை அப்படியே அல்லது சாறாக உட்கொள்வது மிகவும் நல்லது. கோடையில் உடலின் நோய் எதிர்ப்பியல் பை கூட்டுவதற்கு ஏதேனும் ஒரு வடிவத்தில் முற்றிய நெல்லியை பச்சையாக உட்கொள்வது மிகவும் சிறந்தது.  இறுக்கமில்லாத பருத்தி ஆடைகளையே கூடுமான வரையில்  அணிய வேண்டும். அந்திக் கருக்கல் மாலை நேரங்களில் நடை அல்லது உலா செல்வது நல்லது.

அம்மை, காலரா அறிவியல் வளராத காலத்தில் குறிப்பாக 19, 20வது நூற்றாண்டில் மருத்து வத் தின் எல்லைக்கப்பாற்பட்டு மரண பயத்தை விளைவிக்கும் குணப்படுத்தப்பட முடியாத நோய்களாக அம்மை, காலரா இருந்தன. எனவே இந்நோய் கண்டவர் களின் குடும்பத்தாரிடம் இயல்பாகவே  பயத்தின் காரணமாக கடவுள்  நம்பி க்கையும், அதையொட்டிய மூடநம்பிக்கைகளும் வந்து சேர்ந்தன.

அம்மை நோயை தடுக்கலாம்

20வது நூற்றாண்டின் மத்தியில் அறிவியல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்து மருத்துவத்தின்  வெளிச்சம் சமூகத்திற்கு கிடைத்த பிறகு தான் அம்மை நோயின் அச்சம் நீங்கி, அதையொட்டிய மூடநம்பிக்கைகளும் மறையத் துவங்கின. அம்மை நோய் தடுக்கப்பட கூடியது. குணப்படுத்தக் கூடியது தான் என மக்களுக்கு இப்போது புரியத் தொடங்கியுள்ளது.

திட்டமிட்டு செயல்பட வேண்டும். அனைத்தும் அறிவியலுக்குட்பட்டது .  உடல் தன்னை தானே தகவமைத்துக் கொள்ளும் திருத்திக் கொள்ளும், குணப்படுத்திக் கொள்ளும்  அபார சக்தி கொண்டது. அதற்கு ஆதரவாக நோய் தடுப்யையும் பக்க விளைவில்லா மருத்து வத்தையும் நாம் தான் திட்டமிட வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: