×

பட்டுக்கோட்டை- மன்னை ரயில் பாதைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியது: திருச்சி கோட்ட மேலாளர் தகவல்

பட்டுக்கோட்டை: காரைக்குடியில் இருந்து திருவாரூர் வரை அகல ரயில் பாதை பணிகளுக்காக 2012ம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  அதைதொடர்ந்து முதல்கட்டமாக காரைக்குடியிலிருந்து  பட்டுக்கோட்டை வரை 73 கி.மீ தூரம் அகல ரயில் பாதை பணிகள் முற்றிலும் முடிவடைந்து கடந்தாண்டு மார்ச் 30ம் தேதி முதல் இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக  பட்டுக்கோட்டையிலிருந்து திருவாரூர் வரை 75 கிலோ மீட்டர் தூரமுள்ள அகல ரயில் பாதையில் நேற்று  தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் டிராலியில் சென்று ஆய்வு நடத்தினார். பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து துவங்கிய ஆய்வு அதிராம்பட்டினம் வழியாக முத்துப்பேட்டை ரயில் நிலையம் வரை சென்று முடிவடைந்தது. இன்று  முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் துவங்கி தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி ரயில் நிலையம் வரை சென்று முடிவடைகிறது.

பட்டுக்கோட்டை- திருவாரூர் இடையே நாளை (29ம் தேதி) அதிவேக ரயில் சோதனை ஓட்டம்நடக்கிறது. பட்டுக்கோட்டையில் தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் மற்றும் திருச்சி கோட்ட மேலாளர் உதயகுமார்ரெட்டி  ஆகியோர் கூட்டாக நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பட்டுக்கோட்டை- திருவாரூர் இடையே அகல ரயில்பாதை பணிகள் வரும் 31ம் தேதிக்குள் நிறைவடைந்து இன்னும் 2 மாதத்துக்குள் (மே 31க்குள்)  இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கப்படும். பட்டுக்கோட்டை- தஞ்சை புதிய வழித்தடத்துக்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை. பட்டுக்கோட்டை- மன்னார்குடி வழித்தடத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
காரைக்குடியில் இருந்து சென்னைக்கு பட்டுக்கோட்டை வழியாக ரயில் விட வேண்டும்  என்பது இப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pattukottai-Mannu Rail ,Trichy Divisional , Pattukottai - Mother, Railway, Land, Acquisition work
× RELATED விழுப்புரம் – திருவண்ணாமலைக்கு இரண்டு நாட்களுக்கு சிறப்பு ரயில்